அன்பை பகிர வேண்டிய இயக்கம்....
ஆதிக்கத்தை அழிக்க வேண்டிய இயக்கம்...
இறைவன் பற்றை நம்பும் இயக்கம்...
ஈகை போற்றும் இயக்கம்...
உறுதியை போதிக்கும் இயக்கம்...
ஊண்று கோலாய் இருக்க வேண்டிய இயக்கம்...
எளிமையாக நடத்த பட வேண்டிய இயக்கம்...
ஏணியாய் இருக்க வேண்டிய இயக்கம்...
ஐயம் போக்க வேண்டிய இயக்கம்...
ஒடி வந்து உதவ வேண்டிய இயக்கம்...
ஓசையின்று பாசம்வைக்கும் இயக்கம்...
ஔடதமாய் இருக்க வேண்டிய இயக்கம்...
இன்று...
அன்பு காட்ட அமௌன்ட் கேட்கிறது...
ஆதிக்கப்பட்டு கிடக்கிறது...
இரைப்பவரை நம்பி நடக்கிறது...
ஈகையை கட்டாயமாக்குகிறது...
உறுதியாய் இருந்தால் உறுப்படமாட்டாய் என்கிறது...
ஊண் சுண்டி கிடக்க கட்டயாப்படுத்துகிறது...
எவ்வளவு தந்தால் என்ன கிடைக்கும் என்று பட்டியலிடுகிறது...
ஐயம் மட்டுமே கொள்ள வேண்டுகிறது...
ஒடி ஒளிந்து கொள்கிறது...
ஓசையில்லாமல் அழிந்து வருகிறது...
ஔடதம் கிடைக்காமல்...லாகிரியில் லயிக்கிறது...
உனக்கு இங்கு எல்லாம் கிடைக்கும்...நீ நீயாக இல்லாவிட்டால்...
அதையும் ஏற்க ஆளாளுக்கு போட்டி...
திரும்பி பாருங்கள் - உங்களுக்கும் உங்கள் நிழலுக்கும் சிறு இடைவெளி...