Friday, March 8, 2013

மாநாட்டு மேடைகள் இன்று

மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்று மாற்றாமல் பேசும் என்றும் மாற்றபடாத மாற்றான்கள் மட்டுமே - மாற்றப்படும் மேடைகளில்...

அவர்கள் என்றும் மாற்றம் வந்துவிடகூடாது என்று மாற்றி மாற்றி யோசிக்கிறார்கள்...பேசுகிறார்கள்...

காற்றை போல செயல்படமல்...கூற்றை கேட்டு கூன்விழ தயாரகயிருப்போர் இருக்கும் வரை...மாற்றம் என்ற வாரத்தையே துாற்றல்தான்...

மேலும் மாற்றம் தேவையென்றால்...
தேவைப்படுபவர்கள் மாற்றபடுவார்கள்...
தேவையில்லாதவர்கள் தேற்றபடுகிறார்கள்...

மீண்டும் ஒரு மாநாட்டு மேடைக்காக காத்திருக்கிறேன்...
மீண்டும் ஒரு முறை மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று
மாற்றாமல் பேசப்போகும் ”மாற்று சிந்தனை” பேச்சுகள் கேட்க!!!