Friday, April 1, 2011

ஆர்டர் க்ளோசிங் ஆத்திசூடி

  1. நேரடியாக கேள் - வாடிக்கையாளரிடம் நேரடியாக கேட்கலாம்
  2. அடுத்த நிலை சுவை கூட்டு - வாடிக்கையாளரிடம் அந்த பொருளை வாங்குவதன் மூலம் அடுத்து அவருக்கு என்ன கிடைக்கும் என்று கூறலாம்
  3. தயக்கத்தை தங்கமாக்கு - வாடிக்கையாளர் நீங்கள் விளக்கும் பொழுது அது சம்பந்தமாக யோசிக்க துவங்கினால், அந்த தருணத்தில் ஆர்டர் எடுத்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. அந்த தருணத்தில் தங்களுக்கு வாடிக்கையாளார் மேல் உள்ள அக்கரையை கோடிட்டு காட்டுங்கள்.
  4. பயன்கள் பட்டியலிடு - வாடிக்கையாளரிடம் அவர் பெற போகும் பயன்களை பட்டியலிட்டு காட்டுங்கள்
  5. நடைமுறை சூட்சும்ம கோடிடு - வாடிக்கையாளரிடம் இன்று உங்கள் பொருள் அவருக்கு ஏன், எப்படி, எவ்வாறு அவசியம் என்று கூறுங்கள்.
  6. தீதும் நன்றும் பிரித்து சொல் - வாடிக்கையாளரிடம் இதை வாங்குவதன் நன்மை-தீமைகளை கூறலாம். தீமைகளை குறைவாக கூறவேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
  7. படிவம் காட்டி படியவை - வாடிக்கையாளரிடம் ஆர்டர் பார்மை வைத்துக்கொண்டு போசும் பொழுது அது ஆர்வத்தை துாண்டும்
  8. தொடர்பு கதை கூறு - வாடிக்கையாளரிடம் அந்த பொருளின் உபயோகம் சம்பந்தமான கதை, சம்பவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
  9. ஆம்பதில் கூற வை - வாடிக்கையாளரிடம்ஆம்என்று அவர் பதில் கூறும்படியான கேள்விகளை கேட்டு கொண்டே வரும்பொழுது, இடையிடையே நம் பொருள் அவர் வாங்குவீர்களா என்றுஆம்பதில் வரும் கேள்விகளை கேளுங்கள்
  10. விடமல் விரட்டி பிடி - வாடிக்கையாளர் வாங்கினால் என்னிடம் தான் வாங்க வேண்டும் இல்லையென்றால் அவர் அப்பொருளை வாங்க கூடாது என்ற அளவில் தொடர் முயற்சி செய்வும்.


வாடிக்கையாளர் உங்களை நோக்கி வருகிறாரா? - சந்திப்பு நேரத்தில் கவனிக்க வேண்டியவை

  1. உங்களிடம் வரச்சொன்ன நேரத்தில் எதிபார்த்து காத்திருக்கிறார் - முதல் படி கடந்து விட்டீர்கள்
  2. முகத்தில் புன்னகை படர்ந்திருக்கிறது - இரண்டாம் படி கடந்து விட்டீர்கள்
  3. நீங்கள் பேசும்பொழுது உங்கள் கண்களை பார்க்கிறார் - மூன்றாம் படி கடந்து விட்டீர்கள்
  4. இடையில் வரும் அழைப்புகளை தவிற்கிறார் - நான்காம் படி கடந்து விட்டீர்கள்
  5. இடையில் உங்களை உரையாடல் சம்பந்தமாக கேள்வி எழுப்புகிறார் - ஐந்தாம் படி கடந்து விட்டீர்கள
  6. பொருளை பயன்படுத்துகிறவா்கள் சம்பந்தமான கேள்வி எழுப்புகிறார் - ஆறாம் படி கடந்து விட்டீர்கள்
  7. பொருளின் விலை பற்றி கேட்க துவங்குகிறார் - ஏழாம் படி கடந்து விட்டீர்கள்
  8. ஆர்டர் செய்யும் முறைகளை கேட்ட துவங்குகிறார் - எட்டாம் படி கடந்து விட்டீர்கள்
  9. முன்பணம் அல்லது உத்திரவதம் கொடுக்கிறார் - ஒன்பதாம் படி கடந்து விட்டீர்கள்
  10. ஆர்டர் கொடுக்கிறார் - பத்தாம் படி கடந்து விட்டீர்கள்


உங்கள் பையில் இருக்க வேண்டியவைகள்

  1. ஆர்வம் (Interest)
  2. ஆதாரங்கள் (Proofs)
  3. ஆர்டா் பார்மகள் (Forms)
  4. ஆக்னைகள் (Terms & Conditions)
  5. ஆராய்ச்சி முடிவுகள் (Research & Survey Results)
  6. ஆளுமை திறன் (Leadership)
  7. ஆருடங்கள் (Forecasting)
  8. சந்திப்பவரின் விருப்பு - வெறுப்பு (Customer's Interest)


எதுவும் செய்!
எல்லாம் செய்!!
எப்பொழுதும் செய்!!!
ஏதாவது செய்!!!!
விற்பனை வரும்படி செய்!!!!!

No comments:

Post a Comment