எங்கள் ஊரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அறந்தாங்கிக்கு வேலை விஷயமாக அடிக்கடி பேருந்தில் சென்று வருபவர்கள் அதிகம். அப்படி செல்வதற்கு கடந்த வாரம் வரை, அரசு பேருந்துகளில் 4 ரூபாயும், தனியார் பேருந்துகளில் 5 ரூபாயாகவும் கட்டணம் இருந்தது. அதுவே இப்போது அரசு பேருந்துகளில் 8 ரூபாயாகவும், தனியார் பேருந்துகளில் 9 ரூபாயாகவும் உயர்ந்துவிட்டது. ஒரு நபர் அறந்தாங்கிக்கு சென்றுவர பேருந்து கட்டணமாக முன்பு 8 ரூபாய் சிலவிட்டாலே போதும். அதுவே இப்போது இருமடங்கு அதிகமாகி 16 ரூபாயாக உயர்ந்துவிட்டது. ஒரு நாளைக்கு எட்டுரூபாய் கூடுதல் என்று வைத்துக்கொண்டால்,ஒரு மாதத்திற்கான கூடுதல் சிலவு= 240ரூபாய் இதுவே ஒரு வருடத்திற்கு 2880 ரூபாய். இதுவே ஐந்து வருடத்திற்கு 14,400 ரூபாய் கூடுதலாக சிலவாகிறது. இதில் தினமும் பயணம் செய்யாமல் இருக்கும் சில நாட்களை கழித்தால்கூட ஏறக்குறைய 14,000 ரூபாய் வருகிறது. சரி இப்போது எதற்காக இந்தக்கணக்கு என்று நினைக்கிறீர்களா? சொல்றேன். ஒரு மின்விசிறியின் விலை = 2000 ஒரு மிக்ஸியின் விலை = 1500 ஒரு கிரைண்டரின் விலை = 2000 ----------------------------------------------- மொத்தம்= 5500 ----------------------------------------------- ஆக, இந்த 5500 ரூபாய் இலவச பொருட்களுக்கு ஆசைப்பட்ட மக்கள், அதைவிட ஒரு மடங்கு அதிகமாக ஏறக்குறைய 14,000 ரூபாய்களை இழந்திருக்கிறார்கள். அதுதான் ரேசன் கடைகளில் இலவசமாக அரிசி கொடுக்கிறார்களே என்று சொல்கிறீர்களா? முந்தைய ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடும்போது மாதம் 20 ரூபாய் வீதம் வருடத்திற்கு 240 ரூபாயும், ஐந்து வருடங்களுக்கு 1200 ரூபாயும் மட்டுமே சிலவாகியது. அந்த சிலவை இந்த 14000 ரூபாயில் கழித்தால்கூட, மீதி 12,800துண்டுவிழுகிறது. இந்த 12,800 ரூபாயில் இலவச பொருட்களின் விலையான 5500-ஐ கழித்தால் கூட மீதி 7300 ரூபாய் மிச்சமிருக்கிறது. அடப்பாவி மக்களே இந்த 7300 ரூபாய்க்கு இன்னும் சில பொருட்களை நீங்களே சொந்தமாக வாங்கியிருக்கலாமே? எப்படியோ மக்கள் தலையில் துண்டு விழுந்துவிட்டது. இதுதான் சட்டிக்கு பயந்து நேரடியாக அடுப்பில் விழுந்த கதை. |
No comments:
Post a Comment