அவுஸ்திரேலியாவின் 12 வீதமான வேலை வழங்குனர்கள் தமது விண்ணப்பதாரிகளின் Facebook கணக்குகளைப் பார்த்து அவர்களை மறுப்பதாக Testra என்ற நிறுவனத்தின் கணிப்புக் கூறுகின்றது.
பெரும்பாலான அவுஸ்திரேலிய வேலை வழங்குநர்களும் சமூக வலையமைப்புகளைப் பயன்படுத்துவதால் தமது பணியாளர்களின் விபரங்களை அவர்களது சமூகப் பக்கங்களில் பார்த்து விண்ணப்பங்களை நீக்குவதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வு எவ்வாறு, எப்போது மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விடயங்களை இந்நிறுவனம் குறிப்பிடவில்லை.
எனினும் இதில் பொருத்தமற்ற படங்களை வெளியிடுவது (31வீத்ததினர்) மற்றும் படங்கள் பற்றிய பொருத்தமற்ற கருத்துக்களை வெளியிடுவது (37 வீதத்தினர்) போன்றவர்கள் பற்றியும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் நிறுவன உயர் அதிகாரிகள் தமது பணியாளர்கள் தம்மைப்பற்றி அல்லது நிறுவனத்தினைப் பற்றி மோசமான கருத்துக்களை வெளியிடவில்லை என கூறப்படுகிறது.
இதேவேளை தமது பணியாளர்களை 18 வீதமானோர் கண்காணிப்பதாகவும் 15 வீதமானோர் தமது பணியாளர்களின் உற்பத்திகள் பற்றிக் கண்காணிப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஐந்தில் ஒரு முதலாளிகள்தான் Facebook இல் தமது பணியாளர்களுடன் நண்பர்களாக இருக்கின்றனர் என இந்த ஆய்வு கூறுகிறது.
அத்துடன் Facebookஇல் தான் 41 வீதமானோர் தமது விண்ணப்பத்தாரிகளின் விபரங்களை அவர்களது பக்கங்களில் பார்க்கின்றனர்.
இதில் 31 வீதத்தினர் LindeIn பக்கங்களிலும் 14 வீதத்தினர் Twitter இலும் பார்க்கின்றனர் என்றும் இவ் ஆய்வு முடிவு கூறுகிறது.
No comments:
Post a Comment